வணிகம்

இது வளர்ச்சிக்கான பட்ஜெட்: சிஐஐ

செய்திப்பிரிவு

இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) பட்ஜெட் குறித்த சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. பல துறைகளை சார்ந்தவர்கள் பட்ஜெட் குறித்த தங்களது கருத்து களை பகிர்ந்துகொண்டனர். இந்த பட்ஜெட்டுக்கு 7 முதல் 8 மதிப்பெண் கள் (10) வழங்குவதாக இந்திய தொழிலக கூட்டமைப்பின் தமிழக தலைவர்கள் கூறினார்கள். மேலும் பலர் கூறிய கருத்துகளின் தொகுப்பு.

சி.கே.ரங்கநாதன்., கெவின்கேர்

விவசாயத் துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எப்.எம்.சி.ஜி துறையின் தேவை மறைமுகமாக உயரும்.

பி.சந்தானம். - செயின்ட் கோபைன்

ஒட்டுமொத்தமாக இது வளர்ச்சிக்கான பட்ஜெட். கிராமப்புற மேம்பாடு, கட்டுமானம் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி இருக்கிறது. விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர்வது வரவேற்கத்தக்கது.

ரவிச்சந்திரன் புருஷோத்தமன், டன்ஃபாஸ்

உணவுப்பதப்படுத்துதல் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல வட கிழக்கு மாநிலங்களில் ரசாயன கலப்பில்லாத விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் வரவேற்கத் தக்கது.

எஸ்.சந்திரமோகன், டாஃபே

விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைக்கு இந்த பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி, பாசன மேம்பாடு ஆகிய பிரிவுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

SCROLL FOR NEXT