முந்திரிக்கு சுங்க வரி 5 சதவீதம் விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளதற்கு இத்துறையைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் இத்துறையை இது பெருமளவு பாதிக்கும் என்று கர்நாடக முந்திரி உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் பிரகாஷ் கல்பாவி தெரிவித்துள்ளார்.
சுங்கவரியோடு 4 சதவீத சிறப்பு கூடுதல் வரி (எஸ்ஏடி) மற்றும் கச்சா முந்திரி இறக்குமதிக்கு 3 சதவீத செஸ் ஆகியன இத்தொழிலை கடுமையாக பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக 9.36 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 20 லட்சம் டன் முந்திரி பதப்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆனால் உள் நாட்டில் 6 லட்சம் டன் அளவுக்குத் தான் உற்பத்தியாகிறது. எஞ்சி யதை இறக்குமதி செய்ய வேண்டி யுள்ளது என்றும் இதைக் கருத்தில் கொண்டு வரி விதிப்பை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.