டெலிகாம் துறையில் முன்ன ணியில் இருக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம் வீடியோகான் நிறுவனத் தின் அலைக்கற்றையை வாங்க முடிவெடுத்திருக்கிறது. ஆறு வட்டாரங்களில் இருக்கும் 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை யை 4,428 கோடி ரூபாய்க்கு ஏர்டெல் நிறுவனம் வாங்குகிறது.
இதற்கான காலவரம்புடன் கூடிய ஒப்பந்தத்தில் ஏர்டெல் நிறுவனம் கையெழுத்திட்டிருக் கிறது. பிஹார், ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம் (கிழக்கு), உத்திரப்பிரதேசம் (மேற்கு) மற்றும் குஜராத் ஆகிய வட்டாரங்களுக்கான அலைக்கற்றையை ஏர்டெல் வாங்குகிறது. இந்த அலைக்கற்றை 2032-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதன் காரணமாக பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகத்தின் இடையே 3 சதவீதம் வரை உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில் 0.66 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது.
இதற்கிடையே ஐடியா நிறுவனம் குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் (மேற்கு) ஆகிய வட்டார அலைக்கற்றையை வீடியோகானிடமிருந்து 3,310 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக ஏற்கெனவே முடிவெடுத்திருந்தது. ஆனால் மார்ச் 16-ம் தேதி காரணம் ஏதும் தெரிவிக்காமல் இந்த முடிவை ஐடியா நிறுவனம் கைவிட்டது.