ஐடிபிஐ வங்கியில் அரசுக்குள்ள பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் மார்ச் 28 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இந்திய வங்கி அதிகாரி கள் கூட்டமைப்பு இணைந்து இதை அறிவித்துள்ளன.
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசுக்கு 80 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிலையில் 2016-17 பட்ஜெட்டில் ஐடிபிஐ பங்குகளை 50 சதவீதத்துக்கு கீழ் குறைப்பது குறித்து நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
ஐடிபிஐ பங்குகளை வாங்க உலக வங்கியின் முதலீட்டு பிரிவான சர்வதேச நிதி நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பங்குகளை வாங்கும் நடவடிக்கைகளின் பகுதியாக சர்வதேச நிதி நிறுவனம், ஐடிபிஐ வங்கியின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை ஆய்வு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐடிபிஐ பங்குகளை வாங்க அமெரிக்காவின் நிதி மேம்பாட்டு நிறுவனமான சிடிசி குழுமம் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவன மான டிபிஜி கேபிடல் நிறுவனங் கள் மத்திய அரசுடன் பேசி வருகின் றன என்று இந்த தகவல்களை அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.
பங்குகளை வாங்கும் நடவடிக்கைகளில் வெள்ளிக் கிழமை டிபிஜி கேபிடல் போட்டி யிடும் என தெரிகிறது.
பங்கு ஒதுக்கீட்டில் முக்கிய முத லீட்டாளர்கள் 15 சதவீத பங்குகள் அல்லது அதிகபட்ச பங்குகளை வாங்க விரும்புகின்றனர். சிடிசி நிறு வனம் இதற்கான முயற்சிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதற்காக கடந்த வாரத்தில் சர்வ தேச நிதி நிறுவனம் (IFC) மற்றும் சிடிசி குழும உயரதிகாரிகள் ஐடிபிஐ வங்கி உயரதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த தகவல்களை ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் பி.கே. பாத்ரா மறுத்துள்ளார். இந்த பங்கு விற்பனை குறித்து வங்கி அதிகாரிகள் மதிப்பீட்டு அறிக்கை யை மத்திய அரசுக்கு அளித்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்குசந்தை விடுமுறை
வியாழக்கிழமை ஹோலி பண்டிகை, வெள்ளிக்கிழமை புனித வெள்ளியை முன்னிட்டு இந்திய பங்குசந்தைகளுக்கு விடுமுறை தினமாகும்.