வணிகம்

இவரைத் தெரியுமா?- டிராவிஸ் கலாநிக்

செய்திப்பிரிவு

$ மொபைல் ஆப்ஸ் மூலம் சர்வதேச அளவில் டாக்சி தொழிலை மேற்கொண்டுவரும் உபெர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2008ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

$ அமெரிக்காவைச் சேர்ந்தவர். தொடர் தொழில்முனைவர். ஏஞ்செல் முதலீட்டாளர். 14 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

$ 2001ல் பிராட்பேண்ட் வழியாக பொழுதுபோக்கு சேவைகளை வழங்கும் ரெட் ஸ்வூஷ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். 2007 அந்த நிறுவனத்தை அகமய் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கு விற்றார்.

$ 2007-08-ல் அகமய் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் தொழில் முயற்சிகளுக்கான தலைவராக பொறுப்பு வகித்தார்.

$ இணையதளத்தின் முதல் தேடுபொறி மற்றும் பிசினஸ் டூ பிசினஸ் ஃபைல் அனுப்பிய முதல் தலைமுறை இணைய சேவை நிறுவனமான ஸ்கோர் டாட் நெட் நிறுவனத்தின் இணை நிறுவனர்.

$ கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கணிப்பொறி பொறியியல் மற்றும் தொழில் பொருளாதாரம் சார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றவர்.

SCROLL FOR NEXT