வணிகம்

20 % சம்பள உயர்வு வழங்குகிறது ஸ்நாப்டீல்

பிடிஐ

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீல் சிறப்பாக செயல்படும் பணியாளர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்குகிறது. மேலும் சில ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளையும் வழங்குகிறது. இந்த புதிய ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணியாளர்களின் செயல்பாடுகளை ஆராய்வோம். அதன் அடிப்படையில் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு குறைந்த பட்சம் 20 சதவீத ஊதிய உயர்வு இருக் கும் என்று ஸ்நாப்டீல் நிறுவனத் தின் மனிதவளப் பிரிவின் துணைத் தலைவர் சவுரப் நிகாம் தெரிவித் தார். மேலும் சில பணியாளர்களுக்கு நிறுவனத்தின் பங்குகள் (இஎஸ்ஓபி) வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருக் கிறது. எவ்வளவு என்பது குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இது போன்ற நடவடிக்கையில் ஈடு படும்போதுதான் திறமையான பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT