இந்தியாவில் காப்பீடு தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதி கேட்டு 10 புதிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த ஐஆர்டிஏஐயின் நிதி மற்றும் முதலீட்டு உறுப்பினரான வி.ஆர். ஐயர், இந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். முக்கியமாக இந்த நிறுவனங்கள் காப்பீடு மற்றும் மறு காப்பீடு தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதி கேட்டுள்ளன.
இதில் இரண்டு நிறுவனங்கள் ஆயுள் காப்பீடு அல்லாத திட்டங் களுக்கும், ஒரு நிறுவனம் ஆயுள் காப்பீடு தொழிலுக்கும், ஒரு நிறுவனம் மருத்துவக் காப்பீடு, ஒரு நிறுவனம் மறு காப்பீடு தொழிலுக் கும், ஐந்து நிறுவனங்கள் சர்வதேச மறு காப்பீடு தொழிலை இந்தியாவில் மேற்கொள்ளவும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள் ளன என்றார். இந்த நிறுவனங்கள் பெயரை இப்போது வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்தவர்கள் ஆதித்யா பிர்லா குழுமம், தென் ஆப்பிரிக் காவின் எம்எம்ஐ ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மருத் துவக் காப்பீடு தொழிலில் இறங்க உள்ளது என்று கூறியுள்ளனர்.