மத்திய அரசு விரைவில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை அறி முகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண் களுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் கிடைக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுதொடர்பாக கட்சி கூட்டத்தில் அருண் ஜேட்லி மேலும் கூறிய தாவது: அடுத்த சில நாட்களில் தொடங்கப்படவுள்ள இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வங்கியும் ஒரு தாழ்த்தப்பட்டோர் அல்லது பழங்குடியினர் மற்றும் ஒரு பெண்ணுக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் கொடுக்கும். இதன் மூலம் அவர்கள் பெரிய தொழில் முனைவோராக உயரலாம்.
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு இது போன்ற திட்டங்கள் தேவை. ஏற்கெனவே தொடங்கப்பட்ட முத்ரா வங்கியில் லட்சகணக்கான சிறுபான்மையினர் பலன் அடைந்திருக்கின்றனர். அவர்களிடம் கட்சியைக் கொண்டு செல்லுங்கள் என்று அருண் ஜேட்லி கூறினார்.