இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி நிதிக் கொள்கை கூட்டத் துக்கு பிறகு ரெபோ வட்டி விகிதத் தை குறைப்பதற்கான வாய்ப்பிருப் பதாக ஸ்டாண்டர்டு சாட்டர்டு அறிக்கை கூறியுள்ளது.
சர்வதேச அளவில் நிதி சேவை துறையில் முக்கிய நிறுவன மான ஸ்டாண்டர்டு சாட்டர்டு வெளி யிட்டுள்ள அறிக்கையில், 2016-17 நிதியாண்டில் நிதி பற்றாக் குறையை கட்டுக்குள் வைக்க இலக்கு வைத்ததன் மூலம் நிதிக் கொள்கை மீது நம்பகத் தன்மையும், இந்தியாவில் பேரி யல் பொருளாதாரக் ஸ்திரதன்மையும் அதிகரித் துள்ளது. சர்வதேச அளவில் தற்போதைய ஏற்ற இறக்கமான பொருளாதார சூழ்நிலையில் இது இந்தியாவுக்கு மிக பெரிய சாதகம் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இதற்கிடையே ரிசர்வ் வங்கி ஏப்ரல் 5 நடைபெற உள்ள நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெபோ வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்ப்பதாகவும், இடையில் கூடும் கூட்டங் களில் வட்டிக் குறைப்பு அறிவிக்க வாய்ப்பில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டி யுள்ளது.