வணிகம்

ப்ரீத்தி புதிய மிக்ஸி அறிமுகம்

செய்திப்பிரிவு

சமையலறை சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ப்ரீத்தி, ஸோடியாக் (Zodiac) என்கிற புதிய மிக்சர் கிரைண்டரை சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மிக்சர் கிரைண்டர் மூலம் புளிக்கரைசல், தேங்காய் பால் எடுப்பது, கோதுமை மாவு பிசைதல், மசித்தல், இறைச்சி வெட்டுவது உள்ளிட்ட வேலைகளை செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய மிக்சர் கிரைண்டரை அறிமுகப்படுத்தி பேசிய இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரூபேந்திர யாதவ், ``வாடிக்கையாளர்களுக்கு புதுமையான தயாரிப்புகளைக் கொடுப்பதன் மூலம் தொடர்ந்து தென்னிந்திய சந்தையில் ப்ரீத்தி முன்னிலையில் இருந்து வருகி றது. 14 பிரிவுகளில் பிரீத்தி நிறுவன தயாரிப்புகள் கிடைக்கி றது. மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக் கும் ஏற்றுமதி செய்கிறோம்,’’ என்று குறிப்பிட்டார். மஹாராஷ் டிரா, குஜராத் மாநிலங்களில் சந்தையை விரிவுபடுத்த இலக்கு வைத்துள்ளோம். சமையலறை சாதனங்கள் பிரிவில் ஆண்டுக்கு 11.5 சதவீத வளர்ச்சி எங்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்டார். உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பிளிப்ஸ் நிறுவனத்தின் உதவி எங்களுக்கு கிடைக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

ஸோடியாக் மிக்சர் கிரைண்டர் தவிர டாரஸ், அரியாஸ் என்கிற மேலும் இரண்டு மேம்படுத் தபட்ட மிக்ஸர் கிரைண்டர் வகைகளையும் அறிமுகப்படுத் தியது. இந்த மிக்சர் கிரைண்டர் களுக்கான மோட்டார்களுக்கு 5 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT