வணிகம்

100 கனிம சுரங்கங்கள் விரைவில் ஏலம்

பிடிஐ

கனிம சுரங்கப் பணிகளை முடுக்கிவிடும் நோக்கில் விரைவில் 100 கனிம சுரங்கங்களுக்கான ஏலத்தை நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நாட்டில் கனிம அகழ்வுப் பணியை துரிதப்படுத்தும் நோக்கில் அடுத்த வாரம் 100 கனிம சுரங்கங்களுக்கான ஏலம் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இந்த சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏலப் பணியை மேற்கொள்ள எஸ்பிஐ கேபிடல் நிறுவனம் நியமிக் கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமான ஏலம் நடத்த தேவையான இணையதள வசதியை எம்எஸ்டிசி நிறுவனம் மேற்கொள்கிறது. தனியார் துறையினரின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஏலம் நடத்தப்படுவதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT