வணிகம்

நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு பரிசீலனை

பிடிஐ

நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மக்களவையில் இதுகுறித்து நேற்று எழுத்து மூலமாக அளித்த பதில் விவரம்:

நிறுவனச் சட்டக் குழு இது தொடர்பாக அரசுக்கு கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. நிறுவன சட்ட விதி 78-ல் திருத்தங்கள் செய்ய வேண்டும் என அதில் கூறப் பட்டிருந்தது. 2013-ம் ஆண்டு நிறுவன சட்டத்தின் படி மாற்றங்கள் செய்வது தொடர்பாக உயர் நிலைக்குழு ஆராய்ந்து வருகிறது என்றார்.

நிறுவன சட்டங்களை எளிமைப் படுத்துவதன் மூலம் இந்தியாவில் தொழில் புரிவது எளிமையாகும். அந்த நோக்கில்தான் திருத்தங்களை மேற்கொள்ளப் போவதாக அவர் கூறினார்.

நிறுவன சட்டக் குழு அளித்துள்ள பரிந்துரை மீது 1,200 கருத்துகள் வரப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜேட்லி, இந்த ஆலோசனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

நிறுவனங்கள் தொழில் தொடங் குவதை எளிமையாக்க ஒருங் கிணைந்த விண்ணப்பப் படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு, ஒரே விதமான முத்திரையை விருப்ப அடிப்படை யில் தேர்வு செய்வது, எப்போது தொழில் தொடங்கப்படும் என்ற விவரம் தெரிவிக்க தேவையில் என்பன உள்ளிட்ட எளிமையான விதிமுறைகள் கொண்டு வரப் பட்டுள்ளதாக ஜேட்லி கூறினார்.

2015-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை விவரத்தை 3,74,727 நிறுவனங்கள் தாக்கல் செய்யவில்லை என்றார். இருப்பினும் உரிய அபராத கட்டணத்துடன் 270 நாள்களுக்குள் தாக்கல் செய்யும் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT