வணிகம்

‘ஏர் இந்தியா நஷ்டத்தை பற்றி யாரும் பேசுவதில்லை’

பிடிஐ

விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறியதை பற்றி பேசுபவர்கள் ஏன் ஏர் இந்தியா நஷ்டத்தை பற்றி எந்த கேள்வியையும் கேட்பதில்லை என்று இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன் தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

ஏர் இந்தியாவின் நஷ்டம் சுமார் 30,000 கோடி ரூபாய். கிங் பிஷர் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் 10,000 கோடி ரூபாய். இந்த இரண்டு நஷ்டத்துக்கு என்ன வித்தியாசம் இருக்கிறது. கிங்பிஷர் நிறுவனத் தால் வங்கிகளுக்கு இழப்பு, ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டத்தால் வரி செலுத்தும் இந்தியர்களுக்கு இழப்பு.

அனைவரும் விஜய் மல்லையாவை பற்றி பேசுகிறோம். ஏர் இந்தியா நஷ்டம் அடைந்தால் பரவாயில்லையா? நாடளுமன்றத் தில் இதுபற்றி எந்த பேச்சும் இல்லை. ஊடகங்களும் இதை பற்றி எதுவும் பேசவில்லை. யாரும் இது குறித்து எதுவும் பேசவில்லை. இது எப்படி நியாயம் ஆகும். இரண்டு நஷ்டங்களுக்கும் தவறு என்னும் போது கிங்பிஷர் பற்றி மட்டும் அதிகம் பேசுவது ஏன் என்று மோகன்தாஸ் பாய் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதே சமயத்தில் மல்லையாவும் சாடி இருக்கிறார் மோகன்தாஸ் பாய். இப்போது மொத்த நாடும் அவரது செயலுக்கு எதிராக இருக் கிறது. இதற்கு அவரால் எதிர் வினையாற்ற முடியாது. சொகுசான வாழ்க்கையை அனுபவித்து வரும் அவர் பணியாளர்களுக்கு சம்பளம் கூட வழங்காததை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொழிலில் வரும் நஷ்டத்தை மக்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு பணியாளர்களுக்கு சம்பளம் தராமல் இருப்பது, வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பது ஆகியவையே மக்களிடம் கோபத்தை உண்டாக்கின.

மத்திய அரசு அவரை கைது செய்வதை விட, வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி தர வைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT