வணிகம்

மூலதன செலவு; 8 மாநிலங்களுக்கு ரூ 2,903.80 கோடி: நிதியமைச்சகம் ஒப்புதல்

செய்திப்பிரிவு

எட்டு மாநிலங்களில் ரூ 2,903.80 கோடி மதிப்பிலான மூலதன செலவின திட்டங்களுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையை அடுத்து மூலதனச் செலவின் முக்கியத்துவம் மற்றும் மாநில அரசுகளுக்கு தேவைப்படும் நிதி ஆதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு '2021-22-க்கான மூலதன செலவினங்களுக்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி' திட்டம் 29 ஏப்ரல், 2021 அன்று தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகளுக்கு 50 வருட வட்டி இல்லாத கடனாக சிறப்பு உதவி வழங்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டில் ரூ 15,000 கோடிக்கு மிகாமல் இது வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

மூலதன செலவினங்களுக்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டம் கடந்த நிதியாண்டில் நிதி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 27 மாநிலங்களின் ரூ 11,911.79 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு செலவினத் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2020-21-ல் ரூ 11,830.29 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.

2021-22-க்கான மூலதன செலவுகளுக்கு மாநிலங்களுக்கு சிறப்பு உதவி என்ற திட்டத்தின் கீழ் எட்டு மாநிலங்களில் ரூ 2,903.80 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

பிஹார், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், சிக்கிம் மற்றும் தெலங்கானா ஆகிய இந்த எட்டு மாநிலங்களுக்கு ரூ 1,393.83 கோடியை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT