ஏர் ஏசியா இந்தியா நிறுவனத் தில் கடந்த சில மாதங்களாகவே இருந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள் ளது. இந்த நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி மித்து சாண் டில்யா ராஜிநாமா செய்திருக் கிறார். இவர் ஏப்ரல் மாத இறுதி வரை இந்த பொறுப்பில் இருப்பார். புதிய தலைமைச் செயல் அதிகாரியாக அமர் அப்ரால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
20 வருடங்களுக்கு மேலான அனுபவம் மிக்கவர் அப்ரால். ஸ்டார்ட் அப் நிறுவனமான டியூன் மணியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். 2013-ம் ஆண்டில் டியூன் மணியில் இணைந்தார். அதற்கு முன்பு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் 19 வருடங்கள் பணி யாற்றினார். ஹாங்காங், சிங்கப்பூர், இங்கிலாந்து, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் பணியாற்றி இருக்கிறார்.
அப்ரால் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். டெல்லி பல்கலை கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். சி.ஏவும் முடித்திருக்கிறார்.
ஏர் ஏசியா நிறுவனத்தை ஆரம்பத்தில் இருந்து மித்து சாண்டில்யா சிறப்பாக நடத்தி வந்தார். சவாலான காலகட்டத்தில் பணியாற்றிய அவருக்கு இயக்குநர் குழு பாராட்டு தெரிவிக்கிறது என்று நிறுவனத்தின் தலைவர் எஸ்.ராமதுரை தெரிவித்தார். மேலும் சாண்டில்யாவுக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் அப்ரால் பல வருட அனுபவம் மிக்கவர். வாடிக்கையாளர் சேவைதான் விமான போக்குவரத்து துறையில் முக்கியம், இதில் இவர் அனுபவம் மிக்கவர். ஏர் ஏசியா நிறுவனத்தின் அடுத்த கட்டத்துக்கு இவர் எடுத்து செல்வார் என்று நம்புகிறேன் என்று ராமதுரை கூறினார்.
தலைமைச் செயல் அதிகாரி தவிர தலைமை நிதி அதிகாரியாக அங்குர் கண்ணாவும் வர்த்தகப்பிரிவு தலைவராக கிரண் ஜெயினும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் முதல் ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை சாண்டில்யா நடத்தி வந்தார். சாண்டில்யா கூறும் போது கடந்த மூன்று வருடங்களாக துடிப்புமிக்க குழுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சிக்குரியது. அவர்கள் இல்லாவிட்டால் எதுவும் சாத்தியம் இல்லை என்று கூறினார்.