இந்தியாவின் எஃப்எம்சிஜி துறையில் பெருநிறுவனமான கவின்கேர், ஆண்களுக்கான அழகுசாதனப் பிரிவில் முதல் பர்சனல் கேர் பிராண்டான பைக்கர்ஸை அறிமுகம் செய்துள்ளது.
நகர்ப்புற ஆண்களுக்காக தலைமுடி (சிகை) மற்றும் உடல் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற சிறப்பான தயாரிப்புகளை பைக்கர்ஸ் பிராண்டில் வழங்க உள்ளது.
இந்த பிராண்டில் முதலாவதாக ஷாம்பூவை கவின்கேர் அறிமுகம் செய்தது.
கவின்கேர் நிறுவனத்தின் எஃப்எம்சிஜி பிரிவின் தலைமைச் செயல் அலுவலர் வெங்கடேஷ் விஜயராகவன், இதுகுறித்து கூறியதாவது:
“2024 ஆம் ஆண்டுக்குள் 120 கோடி டாலர் அளவைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஆண்களுக்கான அழகுசாதன பிரிவில் கவின்கேர் உத்திசார் அடிப்படையில் இந்த அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று, அனைத்து தொழில்துறைகளுக்கும் பல வாய்ப்புகளை திறந்து விட்டிருக்கிறது; ஆனால், அழகுசாதன மற்றும் தூய்மை வகையினத்தைப் பொறுத்தவரை, இதுவரை இருந்த நிலையையே பெருமளவு மாற்றுவதாக இதன் தாக்கம் அமைந்திருக்கிறது. தனிநபர் அழகுசாதன தயாரிப்புகளுக்கு நகர்ப்புற ஆண் நுகர்வோர்கள் மத்தியில் அதிகரித்த ஆர்வம் உருவாகியிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
ஆகவே, நகர்ப்புற ஆண் நுகர்வோர்களின் தேவைகளுக்குப் பொருத்தமான தயாரிப்புகளின் ஒரு ஒட்டுமொத்த அணிவரிசையை குறிப்பாக உருவாக்குவதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) என்ற எங்களது ஒரு சிறப்பான பலத்தை நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம்,” என்றார்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பைக்கர்’ஸ் பிராண்டில் 2-இன்-1 ஷாம்பூ – கண்டிஷனர்கள், தாடிக்கான ஆயில், தாடிக்கான க்ரீம் மற்றும் ஷவர் ஜெல் என நகர்ப்புற ஆண்களின் தேவைகளை முழு திருப்தியுடன் பூர்த்தி செய்கின்ற தயாரிப்புகள் அடங்கியுள்ளன.
இத்தகைய தனிநபர் அழகுசாதன தயாரிப்புகள் மீது ஆண்களிடம் அதிகரித்து வரும் ஆர்வத்தின் காரணமாக, நீண்டதூர பயணம், மனஅழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளினால் ஏற்படுகின்ற அனைத்து சேதங்களுக்கும் தலையிலிருந்து, பாதம் வரையில் முழுமையான தீர்வுகளை இந்த பிராண்டு வழங்கும். முருங்கை இலைகள், கற்றாழை மற்றும் பல சிறப்பான மூலப்பொருட்களின் பயனளிக்கும் தன்மைகளால் செறிவூட்டப்பட்டிருக்கின்ற இத்தயாரிப்புகள், முழுமையான பராமரிப்பையும், ஊட்டத்தையும் சேர்த்து வழங்கும்.
கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை என்ற புத்துணர்வூட்டும் வண்ணங்களில் பேக்கிங் செய்யப்பட்டிருக்கும் பைக்கர்’ஸ் ஷாம்பூ, ஹெல்மெட் டேமேஜ் ரிப்பேர், ஆன்டி-டேண்ட்ரஃப் மற்றும் ஸ்ட்ராங் &பவுன்சி என்ற மூன்று வேரியண்ட்களில் கிடைக்கின்றன.
75 மி.லி., 180 மி.லி, 340 மி.லி மற்றும் சாஷேக்களில் இவை கிடைக்கப்பெறும். 2 ரூபாய் என்ற விலையில் சாஷேக்கள் கிடைக்கும். SKU -க்களின் விலை ரூ.80-ல் தொடங்கி, ரூ.415 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நுகர்வோர்களின் உணர்வை ஈர்க்கும் வகையில் ஒரு பைக் ஹேண்டில்பார் போல ஷாம்பூ பாட்டில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கவின்கேர் – ன் புதிய அறிமுகமான பைக்கர்’ஸ் தயாரிப்புகள் தமிழ்நாட்டில் அனைத்து விற்பனையகங்கள், பலசரக்கு கடைகள் மற்றும் குறிப்பிட்ட சில மின் - வர்த்தக தளங்களில் கிடைக்கும்.