வணிகம்

வரி வருவாய் இலக்கை மத்திய அரசு எட்டும்: வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா தகவல்

செய்திப்பிரிவு

பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 2 வாரங்கள் இருக்கும் சூழ் நிலையில் வரிவருவாய் இலக்கை மத்திய அரசு எட்டும் என்று வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். கடந்த இரு நிதி ஆண்டுகளாக வரி இலக்கு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறியதாவது.

மார்ச் 31-ம் தேதிக்குள் 14.49 லட்சம் கோடி ரூபாய் வரி வருமானம் கிடைக்கும். குறிப் பாக மறைமுக வரி வருவாய் எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதலாக 40,000 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிதி ஆண்டில் 100% வரி வருவாய் இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மொத்தமுள்ள 14.49 லட்சம் கோடி ரூபாயில் நேர்முக வரி வருவாய் இலக்கு ரூ.7.97 லட்சம் கோடி (வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி). மறைமுக வரி வருவாய் இலக்கு ரூ.6.47 லட்சம் கோடி( உற்பத்தி, சேவை மற்றும் சுங்கவரி உள்ளிட்டவை)

ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் மறைமுக வரி 33 சதவீதமும், நேர்முக வரி 10.9 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. இந்த இரண்டு வரியும் சேர்த்து நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை 73.5 சதவீதத்தை எட்டியுள்ளோம் என்று ஆதியா குறிப்பிட்டார்.

கடந்த நிதி ஆண்டு வரி வருமான இலக்கு ரூ.13.64 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட் டது. ஆனால் பிறகு இந்த இலக்கு ரூ.12.51 லட்சம் கோடியாக குறைக் கப்பட்டது. அதேபோல 2013-14-ம் நிதி ஆண்டில் வரி வருமான இலக்கு 12.35 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட் டது. ஆனால் பிறகு ரூ.11.58 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT