டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ஜென் இசட் தலைமுறையினருக்காக உலகளாவிய அளவில் நேக்கட் ஸ்ட்ரீட் டிசைன் உடனான 'டிவிஎஸ் ரைடர்' மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, டிவிஎஸ் நிறுவனம் இன்று (செப். 16) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், 125 சிசி பிரிவில் பல நவீன சிறப்பம்சங்கள் நிறைந்த, புதிய டிவிஎஸ் ரைடரை அறிமுகப்படுத்துகிறது. இந்த மோட்டார் சைக்கிள், ரிவர்ஸ் எல்சிடி டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், விருப்பத் தேர்வாக வாய்ஸ் அசிஸ்ட் வசதியுடன் கூடிய 5 அங்குல டிஎஃப்டி க்ளஸ்டர், ஒன்றுக்கும் மேற்பட்ட ரைட் மோட்கள், இப்பிரிவு வாகனங்களிலேயே இதுவரையில்லாத வகையில் இருக்கைக்குக் கீழ் ஸ்டோரேஜ் எனப் பல சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகிறது.
டிவிஎஸ் ரைடர் இருசக்கர வாகனம் அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டர் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''டிவிஎஸ் ரைடர், டிஜிட்டல் உலகைத் தங்களது உலகமாகக் கொண்டிருக்கும் 1997-2012 ஆண்டுகளில் பிறந்த ஜெனரேஷன் இசட் தலைமுறையினருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அறிமுகமாகிறது. புதிய டிவிஎஸ் ரைடர் அதன் வாடிக்கையாளர்களுக்கேற்ற வகையில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் கனெக்டட் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.
டிவிஎஸ் மோட்டர் கம்பெனியின் மார்க்கெட்டிங் - கம்முட்டர்ஸ், கார்ப்பரேட் ப்ராண்ட் & டீலர் டிரான்ஸ்ஃபர்மேஷன், பிரிவு துணைத் தலைவர் அனிருத்தா ஹல்தார் கூறுகையில், ''இதன் நேக்கட் ஸ்ட்ரீட் ஸ்டைலிங், இப்பிரிவிலேயே மிக அட்டகாசமான ரைட் மோட்களுடன் கூடிய முடுக்கு விசை, மற்றும் TVS intelliGO மற்றும் ETFi ஆகிய மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய மோனோ-ஷாக் அடிப்படையிலான சவாரியைக் கையாளும் வசதி ஆகியவற்றுடன் கூடிய அட்டகாசமான மைலேஜ் என டிவிஎஸ் ரைடர் அறிமுகமாகி இருக்கிறது. எனவே டிவிஎஸ் ரைடரின் தனித்துவமான சவாரி அனுபவத்தையும், ப்ரத்யேகமான கம்பீரமான ஹெட்லைட் மற்றும் இப்பிரிவு வாகனங்களிலேயே முதல் முறையாக அறிமுகமாகும் ரிவர்ஸ் எல்சிடி க்ளஸ்டர் ஆகியவற்றையும் எங்கள் வாடிக்கையாளர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவற்றுடன் SMARTXONNECTTM வேரியன்ட்டையும், ப்ளூடூத் இணைப்பு வசதி, நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்ட் ஆகிய அம்சாங்களுடன் வழங்குகிறோம். ஜெனரேஷன் இசட் வாடிக்கையாளர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், டிவிஎஸ் ரைடர் என்பது மெய் சிலிர்க்க வைக்கும் பயணம்'' என்றார்.
மேலும் விவரங்களுக்கு www.tvsmotor.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்".
இவ்வாறு டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.