பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விகிதம் 11.39 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 2021 ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)
இந்தியாவில் 2021 ஆகஸ்ட் மாதத்துக்கான (தற்காலிகம்) மற்றும் ஜூன் மாதத்துக்கான (இறுதி) மொத்த விலைக் குறியீட்டு எண்களை (அடிப்படை ஆண்டு: 2011-12), தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மொத்த விலைக் குறியீட்டின் (WPI) தற்காலிகப் புள்ளிவிவரங்கள், நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்டு, தொகுத்து ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி (அல்லது அடுத்த வேலை நாளில்) குறிப்பு மாதத்தின் இரண்டு வார கால தாமதத்துடன் வெளியிடப்படும். 10 வாரங்களுக்குப்பின், இந்தக் குறியீட்டு எண்கள் இறுதி செய்யப்பட்டு, வெளியிடப்படும்.
2021 ஆகஸ்ட் மாதத்துக்கான ஆண்டு பணவீக்க விகிதம் 11.39. இது 2020 ஆகஸ்ட் மாதத்தில் 0.41 சதவீதமாக இருந்தது. கனிம எண்ணெய், பெட்ரோலியப் பொருள்கள், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகத் தயாரிப்புகள், உணவுப் பொருள்கள், ஜவுளிகள், ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருள்கள் ஆகியவற்றின் விலை அதிகரிப்பால், 2021 ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்தது.