வணிகம்

1,353 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை சுந்தர் பிச்சைக்கு வழங்கியது ஆல்பபெட்

ராய்ட்டர்ஸ்

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நிர்வாகியாக இருக்கிறார்.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் சுந்தர் பிச்சைக்கு 1,353 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அளித்துதன் மூலம் இந்த இடத்தை அடைந்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி ஆல்பபெட் நிறுவனத்திடமிருந்து 2,73,328 கிளாஸ் சி பங்குகளை சுந்தர் பிச்சை பெற்றுக் கொண்டார். இதுவரை இவ்வளவு மதிப்புள்ள பங்குகளை எந்த ஒரு நிர்வாகிக்கும் கூகுள் நிறுவனம் வழங்கியதில்லை.

மேலும் ஆல்பபெட் நிறுவனம் 4.28 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை விஎம்வேரின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் துணை நிறுவனர் டாயனே கிரினேவிற்கு வழங்கியுள்ளது. கடந்த வருடம் 14.8 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை கிரினே பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரூத் போரட்டிற்கு 3.83 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள் வழங்கப்பட்டுள்ளன.

கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ்ஜிற்கு 3,460 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள் தற்போது உள்ளன. மற்றொரு நிறுவனரான செர்ஹரி பிரினுக்கு 3,390 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள் உள்ளன.

SCROLL FOR NEXT