வணிகம்

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் இன்று தொடங்குகிறது

இரா.வினோத்

கர்நாடக அரசின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் ச‌ர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூ ருவில் இன்று தொடங்குகிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடங்கி வைக்கிறார்.

கர்நாடக முதல்வர் சித்தரா மையா தலைமையில் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, அனந்தகுமார், சதானந்த கவுடா உள்ளிட்டோரும், கர்நாடக அமைச்சர்கள் பலரும் பங்கேற் கிறார்கள்.

இது தவிர பிர‌பல தொழில‌தி பர்கள் அனில் அம்பானி, ரத்தன் டாடா, சஜன் ஜிண்டால், இன் போசிஸ் நிறுவன‌ தலைவர் நாராயண மூர்த்தி மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில‌திபர்கள், முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, கொரியா, சுவீடன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இந்த 7 நாடுகளும் கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஹூப்ளி, ரெய்ச்சூர் ஆகிய மாவட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக கர்நாடக முதல் வர் சித்தராமையா நேற்று பெங்களூ ருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘கர்நாடகாவில் தொழில் முதலீடுகளை பெருக்கு வதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 2-ம் நிலை நகரங்கள், மாநிலத்தில் பின் தங்கிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி வருகிறோம். இதனால் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகா 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

க‌டந்த ஆண்டுகளில் திரட்டிய முதலீடுகளைக் காட்டிலும், இந்த முறை அதிக முதலீட்டை ஈர்க்க வியூகங்கள் வகுத்திருக்கிறோம். புதிய முதலீடுகளை ஈர்த்து 45 புதிய திட்டங்கள் உட்பட 145 திட்டங்களை உருவாக்க கர்நாடக அரசு தீர்மானித்திருக்கிறோம். இந்த மாநாடு மூலம் ரூ.5 லட்சம் கோடி முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்''என்றார்.

SCROLL FOR NEXT