யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத் தின் தலைவர் பதவியில் இருந்து விஜய் மல்லையா ராஜிநாமா செய்திருக்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த டியாஜியோ (Diageo) நிறுவனத்துக்கு இவருக்கும் இடையே இருந்து வந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. விஜய் மல்லையாவுக்கு 515 கோடி ரூபாய் கொடுக்க நிறுவனம் ஒப்புக் கொண்டிருக்கிறது. தவிர விஜய் மல்லையா மற்றும் அவரது குடும்பத் தினர் செய்த நிதி முறைகேடுகளுக்கு பொறுப்பேற்பதாகவும் நிறுவனம் கூறியிருக்கிறது.
மல்லையா ராஜிநாமாவைத் தொடர்ந்து நிறுவனத்தின் புதிய தலைவராக எம்.கே.ஷர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார். விஜய் மல்லையாவுக்கு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்ற கவுரவ பதவி வழங்கப்பட்டிருக்கிறது.