மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இதுவரை இல்லாத வகையில் 765 புள்ளிகள் உயர்ந்து 56,889.76 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு அதிரடியாக உயர தொடங்கியது. முதலில் 349 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில், அடுத்த 5 நிமிடங்களில் 400 புள்ளிகள் உயர்ந்து 56,526 புள்ளிகளாக இருந்தது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 16,820 புள்ளிகளாகவும் பின்பு 16,829 புள்ளிகளாகவும் உயர்ந்தது. தொடர்ந்து பங்கு சந்தைகள் உயர்வடைந்தன. வங்கித்துறை, நிதி சேவைகள், வாகனம் உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் பெருமளவு ஏற்றம் கண்டன.
இன்றைய பங்கு வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன், மாருதி சுசுகி இந்தியா, மகிந்திரா அண்டு மகிந்திரா, உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் ஈட்டின.
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இதுவரை இல்லாத வகையில் 765 புள்ளிகள் உயர்ந்து 56,889.76 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு இதுவரை இல்லாத வகையில் 226 புள்ளிகள் உயர்ந்து, 16,931.95 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.