வணிகம்

2017-ல் உணவு மானிய தேவை ரூ.1.4 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்

பிடிஐ

அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் உணவு மானிய ஒதுக்கீடு 12.52 சதவீதம் அதிகரித்து ரூ. 1.40 லட்சம் கோடியாக இருக் கும் என்று மத்திய உணவு பொருள் அமைச்சகம் கூறியுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் முதல் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

நடப்பாண்டின் உணவு மானியத்துக்கென 1,24,419 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மத்திய அரசு ஒதுக்கியது. இதில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதற்கு 65,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

நடப்பு பட்ஜெட்டில், அடுத்த நிதி ஆண்டு உணவு மானியத்துக்கென ரூ. 1.40 லட்சம் கோடி தேவை என உணவு அமைச்சகம் கோரியுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத் தப்படும் என்று உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார். தற்போதுவரை 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டன. இன்னும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரும் வேலைகளில் உள்ளன என்றார். இந்த சட்டம் 2013 ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றம் மூலம் கொண்டுவரப்பட்டது.

SCROLL FOR NEXT