வணிகம்

வரி ஏய்ப்புக்கு உடந்தை: எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்திய வரி ஆணையம் நோட்டீஸ்

பிடிஐ

எச்.எஸ்.பி.சி வங்கியின் சுவிஸ் மற்றும் துபாய் கிளைகளுக்கு இந்திய வரி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதாவது 4 இந்தியர்கள் மற்றும் இவர்களது குடும்பத்தினர்கள் வரி ஏய்ப்பு செய்ய உடந்தையாக இருந்தது எச்.எஸ்.பி.சி. என்பதற்கான ‘போதுமான ஆதாரங்கள்’ இருப்பதாகத் தெரிவித்த வரி ஆணையம், சுவிஸ் மற்றும் துபாய் கிளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் எச்.எஸ்.பி.சி வங்கிக்கு கடும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

எச்.எஸ்.பி.சி, வங்கியின் சுவிஸ் கிளைகளில் கருப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக பல நாடுகளும் இந்த வங்கிக்கு நெருக்கடி கொடுக்க விசாரணை மேற்கொண்டு வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வரி அதிகாரிகளுக்கு தாங்கள் போதுமான ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என்று எச்.எஸ்.பி.சி தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் கருப்புப் பணத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட நாடுகள் சுவிஸ் வங்கிகளை கடுமையான கண்காணிப்புக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த கருப்புப் பணம் துபாய் கிளைக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

2015-ம் ஆண்டு எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள வருவாய் 1.84 பில்லியன் டாலர்கள் என்றும் இது 2014-ல் 1.74 பில்லியன் டாலர்களாக இருந்தது என்றும் அவ்வங்கி திங்களன்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT