வணிகம்

மேக்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸில் கேகேஆர் முதலீடு

செய்திப்பிரிவு

பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான கேகேஆர், மேக்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தில் 9.95 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறது. மேக்ஸ் குழுமத் தில் இருந்து சமீபத்தில் பிரிந்த நிறுவனம் மேக்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ். இந்த நிறுவனத்தில் கேகேஆர் 10 சதவீத பங்கு களை வாங்கியுள்ளது. இருந்தா லும் எவ்வளவு முதலீடு செய்யப் பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

இந்தியாவின் வளர்ச்சி மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள் ளோம். நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. இந்த துறையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. அதனால் இந்த நிறுவ னத்தில் முதலீடு செய்ய ஆர்வ மாக இருக்கிறது. இந்த நிறுவனம் காப்பீட்டு துறையில் முக்கியமான நிறுவனம் என்று கேகேஆர் நிறுவ னத்தின் தலைமைச் செயல் அதி காரி சஞ்சய் நாயர் தெரிவித்தார்.

கடந்த மாதம் மேக்ஸ் குழுமம் மூன்று நிறுவனங்களாக பிரிக்கப் பட்டது. மேக்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனம் ஆயூள் காப்பீட்டு பிரிவையும், மேக்ஸ் இந்தியா நிறுவனம் ஹெல்த்கேர் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரிவையும், மேக்ஸ் வென்ச் சர்ஸ் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களையும் கவனித்துக் கொள்கிறது.

காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டை உயர்த்திய பிறகு இந்த துறையில் அந்நிய முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜப்பானை சேர்ந்த நிப்பான் நிறுவனம் ரிலையன்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் தங்க ளுடைய முதலீட்டை உயர்த்தி யுள்ளது. கனடாவை சேர்ந்த சன் லைப் நிறுவனம் பிர்லா சன்லைப் நிறுவனத்தில் முதலீட்டை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. அதேபோல சிங்கப்பூரை சேர்ந்த டெமாசெக், ஐசிஐசிஐ லைப் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்கியுள்ளது.

SCROLL FOR NEXT