ஆன்லைன் லாஜிஸ்டிக்ஸ் தளமான போர்ட்டர் நிறுவனம் தனது செயல்பாட்டை சென்னையில் தொடங்கியுள்ளது. இதற்கான அறிமுக விழா நேற்று நடைபெற்றது. மொபைல் செயலி, ஆன்லைன் மற்றும் போன் அழைப்புகள் மூலமாக லாஜிஸ்டிக்ஸ் சேவையை வழங்கி வரும் போர்ட்டர் நிறுவனம் மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தற்போது இயங்கி வருகிறது.
சென்னையில்
சென்னையில் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ள போர்ட்டர் நிறுவனத்துக்கு, 200 வாகனங்கள் உள்ளன. இதன் மூலம் ஒரு நாளைக்கு 400-க்கும் மேற்பட்ட சேவையை அளிக்க முடியும் என கூறியுள்ளது. டாடா ஏஸ் மற்றும் டாடா சூப்பர் ஏஸ் ஆகிய வாகனங்கள் மூலம் இந்த செயல்பாட்டை அளிக்கவுள்ளது.
இது குறித்து போர்ட்டர் விரிவாக்கத்துக்கான தலைவர் என். சதானந்தன் கூறுகையில், இந்த சேவை மூலம் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக ரீதியான வாகன இயக்கம் இடையே இணைப்பை ஏற்படுத்த முடியும். மேலும் விரைவாகவும் பொருட்களை கொண்டு சேர்க்க முடியும் என்று கூறினார்.
போர்ட்டர் நிறுவனம் ஐஐடி மாணவர்களான பிரனவ் கோயல், உத்தம் டிக்கா மற்றும் விக்காஸ் சவுத்ரி ஆகியோரால் 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.