சென்னை பொது தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் அட்டை விநியோகிக்கப்படுகிறது.
சென்னை பொது தபால் அலுவலக புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மற்றும் ஏற்கெனவே சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் அட்டை வழங்கப்படுகிறது.
* வெவ்வேறு வட்டி வீதத்துடன், பல சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் அலுவலகம் வழங்குகிறது.
* வாடிக்கையாளர்கள் ஒரு சேமிப்பு கணக்கை தொடங்கி, அதன் சிஐஎப் அடையாள எண்ணை, இதர திட்டங்களுடன் இணைத்துக் கொள்ளலாம்.
* சேமிப்பு கணக்குடன், ஏடிஎம் கார்டு வசதி, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளை, வாடிக்கையாளர் வேண்டுகோள் அடிப்படையில் தபால் அலுவலகம் வழங்குகிறது.
* சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தபால் அலுவலகத்தை அணுகி ஏடிஎம் கார்டு வசதி மற்றும் இன்டர்நெட், மொபைல் வங்கி வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்.
* வாடிக்கையாளர்கள் தபால் அலுவலக ஏடிஎம் களில் இலவசமாக பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் வசதியை இந்திய தபால் துறை வழங்குகிறது.
இவ்வாறு சென்னை பொது தபால் அலுவலக தலைமை போஸ்ட் மாஸ்டர் பி முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.