வணிகம்

‘ஜிகா’வின் பெயரை மாற்ற டாடா நிறுவனம் ஆலோசனை

செய்திப்பிரிவு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஹாட்ச்பேக் காரான `ஜிகா’ காரின் பெயரை மாற்றுவ தற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் ஜிகா வைரஸின் தாக்கம் பரவி வரும் நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காரின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஜிகா காரை, ஜிப்பி கார் அல்லது சிறிய ஜிகா கார் என்று விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த கார் டெல்லியில் நடைபெற இருக்கும் ஆட்டொ மொபைல் கண்காட்சிக்கு பிறகு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

லத்தீன் அமெரிக்கா பகுதி களில் கொசுவின் மூலம் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸால் குழந்தைகளின் மூளை பாதிக்கப்படுகிறது.

ஜிகா வைரஸின் தாக்கத்தை யொட்டி உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்த துரதிருஷ்டவசமான நேரத்தில் டாடா ஜிகாவின் அறிமுகம் நடைபெறவுள்ளது.

நாங்கள் மொத்த சூழ்நிலை யும் ஆராய்ந்து வருகிறோம். இதுவரை எந்த முடிவும் எடுக் கவில்லை என்று டாடா மோட் டார்ஸின் கார்ப்பரேட் கம்யூனி கேஷன் தலைவர் மினாரி ஷா தெரிவித்துள்ளார்.

இன்றுமுதல் டெல்லியில் நடைபெற இருக்கிற ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் இந்த காரை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தப்பட இருக்கி றது.

SCROLL FOR NEXT