தற்போது காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்ச வரம்பு 49 சதவீதமாக இருக்கிறது. இதில் ஓர் இந்திய நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனம் 26 சதவீதம் வரை முதலீடு செய்வதற்கு மத்திய அரசின் அனுமதி எதுவும் தேவை இல்லை. 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதம் வரை இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்ய மத்திய அரசின் அனுமதி தேவை.
இப்போது மத்திய அரசின் அனுமதி இல்லாமல் நேரடியாக 49 சதவீதம் வரை முதலீடு செய்வதற்கு வசதியாக விதிகள் மாற்றப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்த துறையில் கூடுதல் முதலீடு வரும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. வரும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன.
தற்போது ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைப், ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ், அவிவா லைப் இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்து வதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்திருக்கின்றன.
தற்போது இந்தியாவில் 24 நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், 28 பொது காப் பீட்டு நிறுவனங்கள் என மொத்தம் 52 காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன.