இந்தியாவில் 24.37 கோடி நபர்களுக்கு நிரந்தர கணக்கு எண் (பான் எண்) கொடுக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. வருமான வரித்துறை யின் சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
இதுவரை இந்திய அளவில் 24,37,96,693 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையின் மூத்த அதிகாரிகள் கூறினர்.
இந்த பான் எண்ணை இனிமேல் அனைத்து பொருளாதார பரிவர்த் தனைகளுக்கும் குறிப்பிட வேண் டும் என மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. 2 லட்ச ரூபாய்க்கு மேல் தங்க நகை வாங்கினால் கட்டாயம் பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது. பொருளாதார பரிவர்த்தனை களில் பான் எண்ணை பயன்படுத்து வது பரவலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிய பான் சட்டத்தின் மூலம் கருப்புப்பண பரிமாற்றங்களை தடை செய்ய முடியும் என்பதும் வருமான வரித்துறையின் எதிர்பார்ப்பு என்று அதிகாரிகள் கூறினர்.
பான் எண்ணுக்கு விண்ணப்பிப் பவர்களுக்கு விரைவாக வழங்கு வதற்கு ஏற்ப புதிய நடைமுறை களை மத்திய அரசு வகுத்துள் ளது. இதற்கு ஏற்ப இணையதளத் தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளது. இணையதள விண் ணப்பத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.