தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) நிறுவனத்தை பட்டியலிடுவதில் நிலவும் சிக்கல் மேலும் தொடர் கிறது. நிறுவனத்தின் பங்குதாரர் கள் என்எஸ்இ-யை பட்டியலிட வேண்டும் என்று வலியுறுத்தி வரு கின்றனர். ஆனால் என்எஸ்இ இன் னொரு பங்குச்சந்தையில் பட்டிய லிட தயக்கம் காட்டி வருகிறது. அதே சமயத்தில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, சொந்த பங்குச்சந்தையில் பட்டியலிட அனுமதிக்கவில்லை.
செபி விதிமுறைகளின் படி, ஒரு பங்குச்சந்தை நிறுவனத்தின் பங்குகளை அதே பங்குச்சந்தையில் பட்டியலிட முடியாது, இன்னொரு பங்குச்சந்தையில்தான் பட்டியலிட முடியும் என்று தெரிவித்துவிட்டது. பலரின் கருத்துகளை கேட்ட பிறகு செபி இந்த முடிவை எடுத் துள்ளது.
அதேசமயத்தில் இந்த விதிக்கு பிஎஸ்இ எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பொதுப்பங்கு வெளியிட (ஐபிஓ) செபியிடம் அனுமதி கோரி இருக்கிறது. இந்த கருத்தை என்எஸ்இ எதிர்த்துவருகிறது.
இந்த விதிமுறைகளை தளர்த் தும் திட்டம் ஏதும் செபியிடம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச அளவில் பல பங்குச்சந்தை நிறுவனங்கள் தங்களது சொந்த பங்குச்சந்தையிலே வர்த்தகம் நடந்துவருகின்றன என்று என்எஸ்இ விவாதம் செய்துவருகிறது. என்எஸ்இக்கு வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஐபிஓ வெளியிட அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.