பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சொத்துகளை பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) முடக்கியுள்ளது. செபிக்கு செலுத்த வேண்டிய ரூ. 1.27 கோடி தொகையை செலுத்தத் தவறியதால் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் உரிமையாளர் பி.எஸ். சாமிநாதனின் சொத்து முடக்கப்பட்டது. பணத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கெடு செவ்வாய்க்கிழமையோடு முடிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை செபி எடுத்துள்ளது.
ஜூன் 3-ம்தேதி செபி-க்கு செலுத்த வேண்டிய தொகையை சாமிநாதன் செலுத்தத் தவறினால் அதை தான் செலுத்துவதாக அவரது மனைவி உமா சாமிநாதன் உத்தரவாதம் அளித்திருந்தார். இருப்பினும் பணம் செலுத்தாததால் காஞ்சீபுரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பை முடக்கியதாக செபி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செபி விதிமுறைகளை மீறியதற்காக சாய்மீரா நிறுவனர் பி.எஸ். சுவாமிநாதன் விதிமீறல் நடவடிக்கைக்காக கடந்த மே 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூன் 3-ம் தேதிக்குள் ரூ. 50 லட்சம் தொகையை செலுத்துவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டார்.