வணிகம்

சோலார் மின் திட்டங்கள் மூலம் 2017-ம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் மின் உற்பத்தி

பிடிஐ

2017 ஆம் ஆண்டுக்குள் சூரிய ஆற்றல் (சோலார்) மூலம் 20 ஜிகாவாட் மின் உற்பத்தியை எட்ட மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சோலார் மூலம் சுமார் 9,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவுக்கு நிறுவப்படும் என்றும், இதுவரை 5,248 மெகாவாட் மின் உற்பத்தி திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அடுத்த நிதி ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் என்கிற அளவுக்கு நிறுவப்படும் என்று மத்திய அரசு ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் மார்ச் மாதத்துக்குள் எதிர்பார்க்கப்படும் 3,790 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை எட்டப்படும். ஏற்கெனவே 5,248 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள நிலையில், மொத்தம் 9,038 மெகாவாட் என்கிற அளவை நடப்பாண்டில் எட்டப்படும் என்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் கூறியுள்ளது,

டெண்டர் விடப்பட்டுள்ள சோலார் மின் திட்டங்களில் 15,177 மெகாவாட் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக உள்ள 12,161 மெகாவாட் திட்டங் கள் 2016-17 நிதி ஆண்டுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்ப் பதாகவும் கூறியுள்ளது. இந்த 12,161 மெகாவாட் மின் உற்பத் தியின் மூலம் 2017 மார்ச் மாதத் துக்குள் சோலார் மின் உற்பத்தி திறன் 21,199 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் அமைச்சகம் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT