தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ராணா கபூர் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு வங்கியின் பங்கு தாரர்கள் ஒப்புதல் அளித்திருக் கிறார்கள். இதற்கான அறிக்கையை இந்த வங்கி வெளியிட்டிருக்கிறது.
கடந்த வாரம் நடந்த 10வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. வங்கியின் இரண்டாவது பெரிய பங்குதாரரான மது கபூர் (இவர் வங்கியின் இணை நிறுவனர் அசோக் கபூரின் மனைவி.) அசோக் கபூர் மறைவுக்கு பிறகு வங்கியில் தனக்கு முக்கியத் துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீதி மன்றம் வரை சென்று போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.