நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை போனை வாங்குவதற்கான முன் பதிவு நேற்று காலை 6 மணிக்கு தொடங்கப்படும் என அறிவிக்கபட்டிருந்தது. அதன்படி நேற்று காலை ஆன்லைனில் பதிவு தொடங்கிய சில விநாடிகளில் 6 லட்சம் பேர் அந்த நிறுவனத்தின் இணையதளத்துக்கு சென்றதால் இணையதள சர்வர் முடங்கியது.
இது குறித்து நிறுவனம் இணையதளத்தில் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. “அன்பான நண்பர் களே உங்களது பேராதரவு எங்க ளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களின் மிகுதியான ஆதரவால் ஒரு நொடிக்கு 6 லட்சம் ஹிட்ஸ் எங்களுக்கு கிடைத்துள்ளது. இத னால் எங்களது சர்வர்கள் முடங்கி யுள்ளன. எங்களது சர்வர்களை அடுத்த 24 மணி நேரத்துக்குள் சரிசெய்துவிடுவோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள் கிறோம். 24 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் போன் விற்பனைக்கான முன் பதிவு தொடங்கப்படும் என்று கூறியுள்ளது.
நொய்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக மாணவர் மோகித் குமார் கோயல் ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த போன் விற்பனை குறித்து பேசிய ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா, வரிகளைக் குறைத்து, ஆன்லைன் சந்தை மூலம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிப்பதன் மூலம் 13.8 சதவீத வரியை சேமிக்க முடியும். ஆன்லைன் சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் விநியோக சந்தை செலவுகளைக் குறைக்க முடியும் என்று கூறினார்.
இந்த ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்ய தலா 250 கோடி ரூபாயில் இரண்டு ஆலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு தேவையான முதலீட்டை கடன் மற்றும் பங்குகள் மூலம் திரட்ட உத்தேசித்துள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார்.