திருமணச் சேவைகளை நடத்தி வரும் மேட்ரிமோனி டாட் காம் நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு மூலம் 1000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாரத்மேட்ரிமோனி டாட் காம், குயிக் ஹீல் டெக்னாலாஜீஸ் ஆகியவற்றுக்கு பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி பொதுப் பங்கு வெளியிட அனுமதி அளித்ததை அடுத்து மேட்ரிமோனி டாட் காம் நிறுவனம் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளது.
பாரத் மேட்ரிமோனி டாட் காம் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் செபி ஒப்புதலுக்கு அனுப்பியது. குயிக் ஹீல்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதம் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதற்கு செபி டிசம்பர் 18-ம் தேதி இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ. 600 கோடி முதல் ரூ. 700 கோடி வரை நிறுவனம் நிதி திரட்ட முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.