சமீபத்தில் பொதுப்பங்கு வெளியீடுகள் (ஐபிஒ) வெற்றி அடைந்து வரும் சூழ்நிலையில், ஐபிஓவில் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தால் மீண்டும் முதலீடு செய்ய வரமாட்டார்கள் என்று செபி தலைவர் யு.கே.சின்ஹா தெரிவித்தார்.
இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் மாநாட்டில் சின்ஹா இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறிய தாவது. 2013-ம் ஆண்டுக்கு முன்பு வெளியான பெரும்பாலான ஐபிஓகள் வெளியீட்டு விலையை விட குறைந்து வர்த்தகமாகின்றன. இது முதலீட்டாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த வருடம் வெளியான ஐபிஓகளில் 56 சதவீதம் வெளி யீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாவதால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். பெரும்பாலா னவை வெற்றி அடைய செபியின் விதிமுறைகளும் ஒரு காரணம். ஐபிஒ விதிமுறைகளை செபி நெறிபடுத்தி இருக்கிறது. விண்ணப் பங்களை பரிசீலனை செய்வது, வெளியீட்டு காலத்தை பாதியாக குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்களை செபி செய்தது என்று சின்ஹா கூறினார்.
கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வருடத்தில் வெளியான ஐபிஓ களுக்கு முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.