நிறுவனங்கள் தங்களது நிதி நிலை அறிக்கை மற்றும் இயக் குநர் குழும உறுப்பினர்கள் பற்றிய விவர அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக் கெடு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பட்டியலிட்ட மற்றும் தனியார் நிறுவனங்கள் நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை அறிக்கை விவரத்தை பொதுவாக அக்டோபர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 2013-14-ம் ஆண்டு வெளியான நிறுவன சட்டத்தில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டதால் அது தொடர்பான விவரங்களை பதிவு செய்து அனுப்புவதற்கு நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இதனிடையே விவரங்கள் அளிப்பது தொடர்பான விண் ணப்பப் படிவத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டன. இத்தகைய புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின்படி விவரத்தை அளிக்கும்படி நவம்பர் 17-ம் தேதி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட் டன.
புதிய விண்ணப்பத்தில் அதிக தகவல்கள் கோரப்பட்டுள்ளதால் பெரும்பாலான நிறுவனங்களால் நவம்பர் 30-ம் தேதிக்குள் விவரத்தை தாக்கல் செய்ய முடியவில்லை.
இதை உணர்ந்து இதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ம் தேதி வரை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இந்த காலக் கெடுவுக்குள் விவரத்தை எவ்வித அபராதமும் இன்றி நிறுவனங்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கலாம் என்று அனைத்து மண்டல இயக்குநரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது.