வணிகம்

மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களுக்கு சர்வீஸ் கட்டணத்தில் சலுகை: ஹோண்டா நிறுவனம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கார்களை பழுது நீக்கித் தருவதில் பல சலுகைகளை ஹோண்டா நிறுவனம் அறிவித் துள்ளது.

இதன்படி வெள்ளத்தில் பாதிக் கப்பட்ட கார்களுக்கான பழுது நீக்குவதற்கு ஊழியர் கட்டணம் (லேபர் சார்ஜ்) முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அத்துடன் உதிரி பாகங்களின் விலையில் 10 சதவீத விலை தள்ளுபடி அளிக்கப் படுவதாகவும், பெயிண்டிங் மற்றும் துரு பிடிக்காமல் தடுக்கும் பணி உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அளிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல வெள்ள பாதிப்புக் குள்ளான கார்களுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்புக்கு லாயல்டி புள்ளிகள் வழங்கப்படும் என்றும் பழைய காருக்குப் பதிலாக புதிய ஹோண்டா காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர் களுக்கு விலையில் ரூ. 30 ஆயிரம் வரை சலுகை அளிக் கப்படும் என நிறுவனம் தெரிவித் துள்ளது. உதிரி பாகங்களை அருகி லுள்ள ஹோண்டா கிடங்கி லிருந்து உடனுக்குடன் அனுப்ப தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும், தமிழகத்தில் உள்ள கிடங்குகளில் கையிருப் பில் இல்லாத நிலையில் வெளி மாநிலங்களில் உள்ள கிடங்கிலிருந்து உதிரி பாகங் கள் கொண்டு வருவதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி அவற்றை தருவித்து வாடிக்கையாளர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கட்சுஷி இனோவ் கூறியிருப்ப தாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கார்கள் நீரில் மூழ்கிவிட்டன. நிலைமை யின் தீவிரத்தை உணர்ந்துள்ள நிர்வாகம் வாடிக்கையாளர் களுக்கு உடனடியாக விரைவான தீர்வு அளிக்க அனைத்து கார் விற்பனையாளர்களுக்கும் அறிவு றுத்தப்பட்டுள்ளது. அனைத்து சேவை மையங்களிலும் கூடுதல் இட வசதி ஏற்படுத்திக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள் ளது. சேவை மையங்களில் நடைபெறும் பணிகளை ஒருங் கிணைத்து கண்காணிக்க ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்குழுவினர் அனைத்து பணிமனைகளிலும் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்வர். அதேபோல காப்பீடு செய்துள்ள நிறுவனங்களிடமும் ஒருங் கிணைப்பு மேற்கொண்டு வாடிக் கையாளர்கள் கோரும் இழப்பீடு விரைவாகக் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யமஹா மோட்டார் சைக்கிள் உற்பத்தி யில் ஈடுபட்டுள்ள யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மற்றும் கடலூர் மாவட்டங் களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது தயாரிப்பு களுக்கு இலவச சர்வீஸ் வசதி செய்து தருவதாக அறிவித்துள் ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங் களைச் சேர்ந்த வாடிக்கை யாளர்கள் இந்நிறுவனம் நடத் தும் இலவச சேவை முகாம்களில் வாகனங்களைக் கொண்டு சென்று பழுது நீக்கிக் கொள்ளலாம் என நிறுவனத்தின் துணைத் தலைவர் ரவீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டங்களில் டிசம்பர் 12-ம் தேதி முதல் இந்த இலவச சேவை முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இவற்றில் வாகனங்களை பழுது நீக்கித் தர எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார். ஜனவரி 31 வரை இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT