வணிகம்

டிமேட் கணக்கு : ‘செபி’ விதிகளில் மாற்றம்

செய்திப்பிரிவு

டிமேட் கணக்கு வைத்திருப்பதற் கான விதிகளை பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியமான `செபி’ மாற்றியுள்ளது. இதன்படி அனைத்து டிமேட் கணக்குகளை யும் அடிப்படை சேவை டிமேட் கணக்குகளாக (பிஎஸ்டிஏ) எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி போடப்பட்ட `செபி’யின் சுற்றறிக்கைக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தகுதி யுள்ள டிமேட் கணக்கு வைத்திருப் பவர் தங்கள் கணக்கை வழக்க மான டிமேட் கணக்கிலிருந்து அடிப்படை சேவை டிமேட் கணக்காக மாற்றிக் கொள்ளலாம்.

செபி எடுத்துள்ள இந்த முடிவின் நோக்கம் அதிக அளவில் நிதி சேர்ப் பது மற்றும் டிமேட் கணக்குகளை வைத்திருப்பவர்களை ஊக்குவிப்பது ஆகும்.

2012 ம் ஆண்டு ஆகஸ்ட் சுற்றறிக்கையில் தனி நபர்கள் ஒரே ஒரு டிமேட் கணக்கு மட்டுமே பிஎஸ்டிஏ மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். பிஎஸ்டிஏ-வில் பங்குகள் விலை அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய்க்கு வைத்துக் கொள்ள முடியும். 50,000 ரூபாய் வரி பிஎஸ்டிஏவில் வருட பராமரிப்பு செலவு பங்குகள் மதிப்பை பொறுத்து வசூலிக்கப்படாது. 50,000 ரூபாயிலிருந்து 2 லட்சம் வரை இருந்தால் ஆண்டு பராமரிப்பு செலவாக 100 ரூபாய் வசூலிக்கப்படும்.

SCROLL FOR NEXT