வணிகம்

5 ஆலைகளிலும் மாகி உற்பத்தி

செய்திப்பிரிவு

புதுடெல்லி

நெஸ்லே நிறுவனத்தின் மாகி நூடுல்ஸ் மீதான தடை நீங்கியதை அடுத்து இந்நிறுவனம் தனது அனைத்து ஆலைகளிலும் மாகி நூடுல்ஸை தயாரிக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் இந்நிறுவனத்துக்கு 5 ஆலைகள் உள்ளன.

5 மாத தடைக்குப் பிறகு கடந்த 9-ம் தேதி மாகி நூடுல்ஸ் சந்தையில் மறு அறிமுகம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள தஹ்லிவால் எனுமிடத்தில் உள்ள ஆலையில் மாகி உற்பத்தி செய்யப்பட்டது.

நூடுல்ஸுக்கான தேவை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் நஞ்சேகௌட், பஞ்சாபில் மோகா, கோவாவில் பிசோலிம், ஹிமாசலப் பிரதே சத்தில் பந்த் நகரில் உள்ள மற்றொரு ஆலையிலும் மாகியை தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தடை விதிக்கப்பட்டபோது சந்தையில் இருந்த 30 ஆயிரம் டன் மாகியை திரும்பப் பெற்று சிமென்ட் ஆலையில் இந்நிறுவனம் அழித் தது. இதற்கு ரூ.450 கோடி செல வானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT