தமிழகத்தில் பெய்துள்ள கன மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் ரூ. 15 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என்று தொழில் கூட்டமைப்பான அசோசேம் மதிப்பீடு செய்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் அதைத் தொடர்ந்த வெள்ளம் காரணமாக பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக அசோ சேம் தெரிவித்துள்ளது.
சிறு, குறுந்தொழில் நிறுவனங் கள், ஆட்டோமொபைல் உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்கள் (ஐடி), ஐடிஇஎஸ், ஜவுளித் தொழில், சுற்றுலா உள்ளிட்ட அனைத்துத் தொழில் களும் பெருமழையால் முடங்கி யுள்ளன. இவை தவிர மேலும் சில தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆட்டோமொபைல் நிறுவனங் களான ஃபோர்டு, பிஎம்டபிள்யூ, ரெனால்ட், ஹூண்டாய், யமஹா ஆகிய நிறுவனங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் உற்பத்தியை நிறுத்தி யுள்ளன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வெளிநாடு களில் உள்ள நிறுவனங்களுக்கு அளிக்கும் சேவை பாதித்து விடக்கூடாது என்பதற்காக முக்கியமான பணிகளை புரியும் ஊழியர்களை வேறு மாநிலத்தில் உள்ள தங்கள் கிளைகளுக்கு மாற்றியுள்ளன. ஹியூலெட் பக்கார்டு(ஹெச்பி) குளோபல் சாஃட் நிறுவனம், அசெஞ்சர், டிசிஎஸ், சிடிஎஸ் ஆகிய நிறுவனங்களும் செவ்வாய்க் கிழமை பிற்பகல் முதல் தங்களது நிறுவனங்களை மூடியுள்ளன. இன்ஃபோசிஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நகர்மயமாதல் மற்றும் திட்டமிடாத வளர்ச்சி ஆகியனதான் இந்த வெள்ளத்துக்குக் காரணம் என்று அசோசேம் டி.எஸ். ரவாத் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல வளர்ச்சிப் பாதையில் உருவாகும் டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களும் இதுபோன்ற திட்ட மிடாததன் காரணமாக இதை விட மோசமான நிலையை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள வீடுகள் மற்றும் தொழில் துறையினருக்கு மத்திய அரசு உடனடியாக தேவையான உதவி களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.