இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தி யன் ஆயில் (ஐஓசி) தனது விரிவாக்கப்பணிகளுக்காக ரூ.1.75 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.
சுத்திகரிப்பு விரிவாக்கம், புதிய குழாய் தடங்கள் அமைப்பது உள்ளிட்ட பிரிவுகளில் அடுத்த ஏழு வருடங்களில் முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக் கிறது.
ஒடிஷாவில் உள்ள பாரதீப் சுத்திகரிப்பு மையத்துக்கு 34 ஆயிரத்து 555 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் இதன் உற்பத்தி தொடங்கியது.
பாரதீப் நிறுவனத்தின் உற்பத்தி தொடங்கிய பிறகுதான், சுத்திகரிப்பு திறனில் ரிலையன்ஸ் நிறுவனத்தை ஐஓசியால் முந்த முடிந்தது.
அதேபோல பானிபட் சுத்திகரிப்பு மையத்தின் திறனை 1.5 கோடி டன்னில் இருந்து 2.02 கோடி டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தவிர கொயாலி, மதுரா மற்றும் பருனி ஆகிய சுத்திகரிப்பு நிலையங்களின் திறனையும் அதிகப்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது.