தகவல் தொழில்நுட்பத் துறை பயன்பாட்டுக்கான சர்வதேச குறியீட்டில் இந்தியா 131-வது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதே தொலைத்தொடர்பு கூட்டமைப்பு (ஐடியு) தெரிவித்துள்ளது.
167 நாடுகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப இணைப்பை வைத்து சர்வதேச குறியீட்டை அளவீடு செய்துள்ளனர். கடந்த 5 வருடமாக வீடுகளில் இண்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, உலகில் 320 கோடி பேர் அதாவது உலக மக்கள் தொகையில் 43.4% பேர் தற்போது ஆன்லைனில் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மொபைல்- செல்லுலார் இணைப்பு 710 கோடியை அடைந் துள்ளது. மேலும் ஐடியு உட்பட 167 நாடுகளுடைய பொருளாதா ரத்தின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறியீடு 2014-2015 ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா, ஹாங்காங், ஜப்பான் உட்பட ஆறு நாடுகள் சர்வதேச குறியீட்டில் முதல் 20 இடங்களில் இருக்கிறது. மேலும் இந்த பிராந்தியத்தில் சர்வதேச குறியீட்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மிகக் குறைந்த இணைப்பை கொண்டுள்ளன.
இந்தியாவில் வீடுகளில் கம்ப் யூட்டர் பயன்படுத்துவோர் சதவீதம் 2014-ம் ஆண்டு 13 சதவீதமாக உள்ளது. இது 2010-ல் 6.1 சதவீதமாக இருந்தது. வீடு களில் இண்டர்நெட் இணைப்பை பயன்படுத்துவோர் சதவீதம் 15.3 ஆக இருக்கிறது. மேலும் தனிநபர்கள் இண்டர்நெட் பயன்படுத்துவது 18 சதவீதமாக உள்ளது.