அமர ராஜா பேட்டரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். 2003-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
நிறுவனத் தலைவர் ராமச்சந்திர என் கல்லாவின் மகன். 1992 ல் நிர்வாகப் பிரதிநிதியாக பணிக்குச் சேர்ந்து இயக்குநராக உயர்வு பெற்றவர்.
எக்ஸைட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிஎன்பி பேட்டரி டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் சர்வதேச விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.
2009 முதல் கல்லா புட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். அமர ராஜா குழும நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் பொறுப்பில் இருக்கிறார்.
சிஐஐ-யங் இண்டியன்ஸ் அமைப்பை நிறுவிய குழுவில் ஒருவர். சிஐஐ தேர்வு உறுப்பினர், ஆந்திர பிரதேச தலைவர் என பொறுப்புகளை வகித்துள்ளார். பல்வேறு தொழில்துறை அமைப்புகளின் ஆலோசனைக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் தொழில் பொருளாதாரம் மற்றும் அரசியலில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். பிஸினஸ் டுடே அளிக்கும் சிறந்த 100 சிஇஓ (2015) பட்டியலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.