வோடபோன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் வரி சர்ச்சை தொடர்பான வழக்குகளை விசாரிக்க நடுவர்களை நியமிக்க உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
வரி சர்ச்சை தீர்மானங்களில் முக்கிய பன்னாட்டு நிறுவனங்களை வருமான வரித்துறையினர் அணுகுவது பற்றி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்து பூர்வமாக ஜெயந்த் சின்ஹா பதிலளித்தார்.
சர்ச்சை தொடர்பான தீர்மானங்களை வோடபோன் இண்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ், வோடபோன், நோக்கியா, கெய்ர்ன் எனர்ஜி, வேதாந்தா ரிசோர்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து இருதரப்பு முதலீடு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி (பிஐபிஏ) அரசு அறிக்கைகளை பெற்றுக் கொண்டது.
இந்திய அரசு குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்ததை ஒத்துக் கொண்டாலும் அல்லது வரி சர்ச்சை வாதங்களை ஏற்றுக்கொண்டாலும் ஒப்பந்தத்தின்படி தீர்க்கப்படும் என்று இந்த நிறுவனங்களுக்கு கூறப்பட்டிருக்கிறது என்று சின்ஹா கூறினார்.
இருதரப்பு முதலீடு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் படி நடுவர்களை மத்திய அரசு நியமிக்க உள்ளதாகவும் கூறினார். மேலும் வருமான வரிச் சட்டம் 1961 வரிமான வரி செலுத்துவோருக்கு வரி சர்ச்சைகளை தீர்த்துக் கொள்வதற்கு சட்ட உரிமைகளை வழங்குகிறது. இந்த சட்டம் மேலும் தீர்வு ஆணையம் மூலம் வரிச் சர்ச்சைகளை தீர்த்துக் கொள்ளும் உரிமையையும் வழங்கிறது என்று கூறினார்.
வாராக்கடன்
வங்கிகளில் வாராக் கடனை வேண்டுமென்றே செலுத்த தவறியவர்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ. 64,335 கோடி என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். இது வங்கிகளின் மொத்த வாராக் கடனில் ஐந்தில் ஒரு பங்காகும்.
7,265 பேர் வங்கிகளில் ரூ. 25 லட்சத்துக்கும் மேல் கடன் பாக்கி வைத்துள்ளனர். இவர்கள் வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்த விரும்பாதவர்களாக கண் டறியப்பட்டுள்ளனர். மொத்த முள்ள 7,265 வழக்குகளில் 115 வழக்குகள் வங்கி அதிகாரி களின் ஒத்துழைப்போடு செயல் பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டதாக சின்ஹா தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்