நீர் சுத்திகரிப்பு மேலாண்மை நிர்வாகத்தில் முன்னிலை வகிக்கும் பன்னாட்டு நிறுவனமான வாபாக், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் (2020-21) ரூ.110 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிட்டல் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் வருமானம் ரூ.2,835 கோடியாகும். தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக நிறுவனத்தின் நிதிப்புழக்க அளவு ரூ.136 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் நிகர கடன் அளவு ரூ.44 கோடியாகும். நிறுவனத்துக்கு ரூ.9,500 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகில் முன்னிலையில் உள்ள 50 முன்னணி நிறுவனங்களில் 4-வது நிறுவனமாக வாபாக் திகழ்கிறது. மார்கி இன்வெஸ்டார் நிறுவனம் ரூ.120 கோடி முதலீடு செய்துள்ளது. இதற்கு முன் 2010-ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.120 கோடி திரட்டியிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனம் மூன்று மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.