வணிகம்

பிஎப் வட்டி விகிதத்தில் மாற்றம் வேண்டாம் - நிதி அமைச்சகம் விருப்பம்

பிடிஐ

வருங்கால வைப்பு நிதிக்கான (பிஎப்) வட்டி விகிதம் தற்போதைய நிலையிலே தொடர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் விரும்புகிறது. கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக பிஎப் வட்டி விகிதம் 8.75 சதவீதமாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டிலும் (2015-16) இதே வட்டி விகிதம் தொடர நிதி அமைச்சகம் விரும்புகிறது.

பிஎப் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனை குழு கடந்த வாரம் கூடியது. இதில் தொழிலாளர் துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். சிறிய சேமிப்பு திட்டங்கள், பிபிஎப் உள்ளிட்ட திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதனால் பிஎப் மீதான வட்டி தற்போதைய நிலைமையிலே தொடர வேண்டும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் கூறிதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பிஎப் அமைப்பு வட்டி விகிதம் தொடர்பாக முடி வெடுத்துவிட்டதாக தெரிகிறது. வருமானம் அதிகமாக இருப்பதால் கடந்த இரு வருடங்களில் கொடுத்த வட்டியை விட கூடுதலாக கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் வட்டி விகிதம் இதே நிலையில் தொடர நிதி அமைச்சகம் விரும்புகிறது.

வரும் 9-ம் தேதி நடக்க இருக்கும் கலந்தாய்வு கூட்டத்தில் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுவதற் கான வாய்ப்புகள் குறைவு என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ) ரிசர்வ் வங்கி 1.25 சதவீதம் குறைத்தது. இதனால் சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற் பட்டிருக்கிறது என்று ஏற்கெனவே நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.

தபால் நிலைய மாதாந்திர சேமிப்பு திட்டங்கள், பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி உள்ளிட்ட திட்டங் களுக்கு வட்டியை குறைக்க நிதி அமைச்சகம் திட்டமிட்டிருக்கிறது. இதில் சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கு 9.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

இருந்தாலும் பிஎப் மீதான வட் டியை பிஎப் அறங்காவலர் குழு தன்னிச்சையாக முடிவு செய்யலாம். தன்னுடைய முதலீடுகளின் மீதான வருமானத்தை பொறுத்து இந்த குழு வட்டியை நிர்ணயம் செய்யும்.

SCROLL FOR NEXT