வணிகம்

தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு? - நிர்ணயம் செய்ய நிபுணர் குழு அமைப்பு

செய்திப்பிரிவு

தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்தது.

தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வது பற்றி, தொழில்நுட்ப தகவல் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கான உத்தரவு மற்றும் இதற்கான குழுவையும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைத்துள்ளது. இந்தக் குழு, அறிவிப்பு வெளியிட்ட தேதியிருந்து 3 ஆண்டுகளுக்கு செயல்படும்.

இந்த நிபுணர் குழுவுக்கு பொருளாதார வளர்ச்சி மைய இயக்குனர் பேராசிரியர் அஜீத் மிஸ்ரா தலைமை தாங்குகிறார். கொல்கத்தா ஐஐஎம் பேராசிரியர் தாரிகா சக்ரவர்த்தி, பொருளாதார ஆராய்ச்சி தேசிய கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் அனுஸ்ரீ சின்ஹா, விபா பல்லா, இணை செயலாளர், வி.வி.கிரி தேசிய தொழிலாளர் மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் எச். சீனிவாஸ் ஆகியோர் இந்த குழுவின் நிபுணர்களாக உள்ளனர்.


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மூத்த ஆலோசகர் டி.பி.எஸ் நெகி இந்த குழுவின் உறுப்பினர் செயலாளராக உள்ளனர்.

இந்த நிபுணர் குழு தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம் குறித்த பரிந்துரையை அரசுக்கு வழங்கும். ஊதியம் நிர்ணயிப்பதில், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் சிறந்த முறைகள், குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான அளவுகோல், வழிமுறை ஆகியவற்றை இந்த நிபுணர் குழு ஆய்வு செய்யும்.

SCROLL FOR NEXT